சுடச்சுட

  

  டெஸ்ட் ஹாக்கி: நியூஸிலாந்துக்கு இந்தியா பதிலடி

  By  புது தில்லி,  |   Published on : 08th October 2015 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரின் 2-ஆவது போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
   நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய ஹாக்கி அணி, அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது போட்டியில், தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால், 10-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்தனர்.
   ரமன்தீப் சிங்: இருப்பினும், 13-ஆவது நிமிடத்தில் வீரேந்திர லக்ரா கொடுத்த பாûஸ, ரமன்தீப் சிங் அபாரமாக செயல்பட்டு கோலாக்கினார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தரம்வீர் சிங், ஏற்படுத்திய கோல் வாய்ப்பை எதிரணியினர் சிறப்பாக விளையாடி தடுத்தனர். இந்திய வீரர்களின் தடுப்பாட்டத்துக்கு முன்னால், நியூஸிலாந்து அணியின் எதிர் தாக்குதல் உத்தி எடுபடவில்லை.
   23-ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்துக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் சிறப்பாக செயல்பட்டு கோல் அடிக்க இடம்கொடுக்கவில்லை. முதல் பாதியில் மேற்கொண்டு கோல்கள் எதுவும் விழாததால் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.
   இந்தியா வெற்றி: நியூஸிலாந்தின் இடைவிடாத முயற்சிக்கு 45-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணிக்கு கேன் ரஸல் முதல் கோலை பெற்றுத் தந்தார். இருப்பினும், 52-ஆவது நிமிடத்தில் மன்பிரீத் சிங்கும், கடைசி நிமிடத்தில் நிகின் திம்மையாவும் கோல் அடித்து வலுவான முன்னிலைப் பெறச் செய்தனர்.
   இதனால், ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளிடையிலான 3-ஆவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai