Enable Javscript for better performance
போலந்து ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் அஜய், குருசாய் தத்- Dinamani

சுடச்சுட

    

    போலந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், குருசாய் தத் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
     போலந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில், சர்வதேச தரவரிசையில் 25-ஆவது இடம் வகிக்கும் இந்திய வீரர் அஜய் ஜெயராம், உள்ளூர் வீரரான மார்க் கல்ஜோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஜெயராம் இழந்தாலும், முடிவில் 19-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் தனது அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனியின் ஃபேபியன் ராத்தை சந்திக்கிறார்.
     இதேபோல, மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் குருசாய் தத், பெல்ஜியத்தின் மேக்ஸிம் மோரீல்ûஸ 21-8, 21-9 என்ற கணக்கில் வீழ்த்தினார். குரு, தனது அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயின் சுன்-வெய் சென்னை எதிர்கொள்கிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai