சுடச்சுட

  

  இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி-20 கிரிக்கெட் மழையால் ஆட்டம் ரத்து

  By  கொல்கத்தா  |   Published on : 09th October 2015 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  23

  இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
   முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்து கோப்பையைப் பறிகொடுத்த இந்திய அணி, தொடரின் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கவிருந்த போட்டி, மழை காரணமாக தாமதமானது. 7.30 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்து போட்டியை நடத்துவது குறித்து முடிவெடுக்க நடுவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், மழை தொடர்ந்து பெய்ததாலும், மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதாலும் போட்டியை திட்டமிட்டபடி தொடங்க இயலவில்லை.
   அதன் பிறகு, 8.30 மணிக்கும், 9.30 மணிக்கும் மைதானம் ஆய்வு செய்யப்பட்டது. விளையாடுவதற்கு சாதகமான வகையில் மைதானம் இருந்தால் ஓவர்களைக் குறைத்து போட்டியைத் தொடங்கலாம் என திட்டமிடப்பட்டது.
   ஆனால், அதற்கு இடமளிக்காத வகையில் மைதானம் முழுவதும் ஈரமாகி இருந்ததால் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai