சுடச்சுட

  

  ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணி மீண்டும் தோல்வி

  By  புது தில்லி,  |   Published on : 09th October 2015 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  35

  இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் தில்லி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கல் சென்னையின் எஃப்சி தோல்வியைத் தழுவியது.
   ஐஎஸ்எல் போட்டியில் வியாழக்கிழமை தில்லி ஜவஹர்லால் நேரு மை நடைபெற்ற 6-ஆவது லீக் போட்டியில் தில்லி டைனமோஸ் எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை கண்டு களிப்பதற்காக 20 ஆயிரம் ரசிகர்கள் அரங்கிற்கு வந்தனர். ஆட்டத்தின் 8-ஆவது நிமிடத்தில் தில்லி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. தில்லி கேப்டன் ஹன்ஸ் முல்டர் பந்தை உதைக்க முயன்றபோது சென்னை வீரர் மேனுலி பிளாசி கையினால் இடித்தார்.
   இதனால், நடுவர் தில்லி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்தார். இதனை அருமையாக பயன்படுத்திக் கொண்ட செபாஸ்டியன் கர்டோசோ (பிரேசில்) ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
   தில்லி வெற்றி: இதனால், ஆரம்பத்திலேயே தில்லி அணி முன்னிலைப் பெற்றது. கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் கோல் அடித்துக் கொடுத்த ஜிஜி, தேசிய அணிக்காக விளையாட சென்றுவிட்டார். மற்றொரு முன்னணி வீரர் ஃபிக்ரு, 100 சதவீதம் உடற்தகுதி பெறாததால் போட்டியில் முழுமையாக பங்கேற்கவில்லை.
   கடைசி 10 நிமிடங்கள் அவர் விளையாடினாலும் அது, அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற உதவவில்லை. இதேபோல தில்லி அணியிலும் ராபின்சிங் இல்லாவிட்டாலும் அந்த அணியின் புளோரென்ட் மளவ்டா அந்த குறையைப் போக்கினார். முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் தில்லி அணி முன்னிலை வகித்தது.
   இரண்டாவது பாதியில் பந்து சென்னை வீரர்களின் ஆதிக்கத்தில் இருந்தாலும், அவர்கள் அதனை பயன்படுத்தி கோல் அடிக்க இயலவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கணக்கில் தில்லி டைனமோஸ் எஃப்சி வெற்றி பெற்றது. இந்த சீசனில் அந்த அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
   2-ஆவது தோல்வி: முன்னதாக கோவா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 2-0 என்ற கணக்கில் தில்லி அணி தோல்வியைத் தழுவியிருந்தது. அதேநேரத்தில் சென்னை அணிக்கு இது 2-ஆவது தோல்வியாகும். முதல் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் சென்னையின் எஃப்சி தோல்வியடைந்தது.
   ற
   இன்றைய ஆட்டம்
   எஃப்சி புணே சிட்டி
   வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி
   நேரம் : இரவு 7 மணி, இடம்: புணே
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai