சுடச்சுட

    

    கிரிக்கெட் மைதானத்தில் பாட்டில் வீச்சு: விசாரணை தொடங்கியது

    By நமது நிருபர்  |   Published on : 09th October 2015 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டக் பாராபதி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டியின்போது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை ஒடிஸா உள்துறைச் செயலர் அசித் திரிபாடி வியாழக்கிழமை தொடங்கினார்.
    ஆட்டத்தின்போது மைதானத்தில் எப்படி ரசிகர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டனர் என்பது குறித்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறேன். கட்டக் பாராபதி மைதானத்தில் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவிருக்கிறேன் என்று திரிபாடி, புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார். உள்துறைச் செயலர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையின்போது திரிபாடி ஏதாவது தேவை எனக் கேட்டால் அவருக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று மாநில விளையாட்டுத் துறைச் செயலர் சாஸ்வத் மிஸ்ரா கூறினார். பாட்டில்கள் வீசுப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் அறிக்கை தருமாறு உள்துறைச் செயலருக்கு முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த 6ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டில்களை ரசிகர்கள் எடுத்துச் செல்ல ஒடிஸா கிரிக்கெட் சங்கம் அனுமதி வழங்கியது தவறு என காவல் துறையினரும், காவல் துறையினர் சற்று எச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது என்று கிரிக்கெட் சங்கமும் பரஸ்பரம் புகார் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் ரசிகர்கள் ரகளை செய்ததால் ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து நாடு முழுவதும் எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து காவல் துறையினர் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.
    மைதானத்துக்குள் பாட்டில்களை எறிந்த நபர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரகளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஒடிஸா கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டிருக்கிறோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்டக் காவல் துணை ஆணையர் சஞ்சீவ் அரோரா கூறினார்.












     

     

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai