சுடச்சுட

  

  சர்வதேச குத்துச்சண்டை: காலிறுதியில் விகாஸ், ஷிவ தாபா

  By  தோஹா,  |   Published on : 09th October 2015 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் விகாஸ் கிருஷண், ஷிவ தாபா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
   சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவில் ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் விகாஸ் கிருஷண், ஐரோப்பிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்திலிருப்பவருமான தாமஸ் ஜெப்லான்ஸ்கியை (போலந்து) எதிர்கொண்டார். இதில், 2-1 என்ற கணக்கில் விகாஸ் கிருஷண் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர் தனது அடுத்த ஆட்டத்தில், எகிப்தின் ஹாசாம் அப்தினை எதிர்கொள்கிறார்.
   56 கிலோ எடைப் பிரிவுக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் ஷிவ தாபா, மொராக்கோவின் முகமது ஹாமௌத்தை தோற்கடித்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தார். ஷிவ தாபா, தனது அடுத்த ஆட்டத்தில் கத்தாரின் ஹகன் எர்ஸுகருடன் மோதுகிறார்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai