Enable Javscript for better performance
நாளை ஹெச்.சி.எல். 42வது உலக பிரிட்ஜ் டீம்ஸ் சாம்பியன்ஷிப்ஸ் இறுதிப்போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    நாளை ஹெச்.சி.எல். 42வது உலக பிரிட்ஜ் டீம்ஸ் சாம்பியன்ஷிப்ஸ் இறுதிப்போட்டிகள்

    By DN  |   Published on : 09th October 2015 06:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹெச்.சி.எல். 42வது உலக பிரிட்ஜ் டீம்ஸ் சாம்பியன்ஷிப்ஸ் போட்டிகள் அக்டோபர் 10 (சனிக்கிழமை) அன்று நிறைவடைகின்றன. பெர்முடா பவுல், வெனிஸ் கோப்பை மற்றும் டி’ஓர்சி கோப்பையை வெல்ல இறுதிப் போட்டிகளுக்கு தேர்ந்துள்ள அணிகளிடையே இறுதிப்போட்டிகள் நடைபெறுகின்றன.

    இது குறித்து இந்திய பிரிட்ஜ் சம்மேளனம் தலைவர் என். ஆர். கிருபாகரமூர்த்தி கூறியதாவது:

    சர்வதேச போட்டிகளை நடத்துவது சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. இருப்பினும், இந்திய பிரிட்ஜ் அமைப்பின் திட்டமிடல் காரணமாக இப்போட்டிகள் சிறப்பாகவே நடைபெற்றுள்ளன. எம் ஆர் ஜி அப்பாராவ் தலைமையிலான தொழில்நுட்ப குழு சிறந்த தொழில்நுட்ப சேவையை இப்போட்டிகளுக்கு வழங்கியுள்ளது. போட்டி நடத்தப்பட்ட விதம் மற்றும் ஐ டி ஸி கிராண்ட் சோழாவின் ஆதரவு மற்றும் உபசரிப்பைப் பற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள், வெளிநாட்டு அதிகாரிகள் என அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

    அவர் மேலும் கூறுகையில், இப்போட்டிகளின் வெற்றியால், சென்னை மட்டுமல்லாது இந்தியா முழுக்க இளைஞர்களிடத்தில் “பிரிட்ஜ்” பிரபலமடையும் என நம்புகிறோம். சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் இவ்விளையாட்டு பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்து கற்பிக்கப்பட்டால், எதிர்காலத்தில், சர்வதேச அளவில் சிறந்த வீரர்களை இந்தியா உருவாக்க முடியும்.

    சர்வதேச பிரித் சம்மேளனம் தலைவர் ஜியான்னரிகோ ரோனா கூறியதாவது: இந்த முறை நடைபெற்ற சர்வேதேச போட்டிகளில் பல நட்சத்திர வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களில் சியா மஹ்மூத் (யு.எஸ்.ஏ), எரிக் விக்டர் ராடுவெல் (யு.எஸ்.ஏ), பியேர் சிம்மர்மேன் (மொனாகோ), ஜெப்ரி ஜான், மேக்ஸ்திராத், (யு.எஸ்.ஏ) கேய்ர் எல்கேமோ (மொனாகோ), தார் ஹெல்னஸ் (மொனாகோ), பிரெட்ரிக் நிஸ்ட்ராம் (ஸ்வீடன்), ஜோகன் உப்மார்க்(ஸ்வீடன்), தாமஸ் பெஸ்ஸிஸ் (பிரான்ஸ்), ஜோன் கிரண்யாக்(யு.எஸ்.ஏ), வின்சென்ட் டேமுய் (யு. எஸ். ஏ), சுமீத் முகர்ஜி (இந்தியா), ராபர்ட் டேவிட் “பாப்” ஹம்மன் (யு.எஸ்.ஏ) ஆண்ட்ரூ ராப்சன் (இங்கிலாந்து), அந்தோணி ஆர். (டோனி) பாரஸ்ட்டர் (இங்கிலாந்து), மைக்கேல் ரோசன்பர்க் (யு.எஸ்.ஏ) நிகோலஸ் ஸ்மித் மற்றும் சால்லி ப்ராக் (இங்கிலாந்து), சிள்வீ வில்லார்ட் (பிரான்ஸ்), ஹோங்லி வாங் (சீனா), காப்ரியல்லா மனாரா(இத்தாலி), கார்லா அர்நால்ட்ஸ் (நெதர்லேன்ட்ஸ்), ஜில் லெவின் மற்றும் லின் டீஸ் (யு.எஸ்.ஏ). என்றார்.

    ஹெச்.சி.எல். 42வது உலக பிரிட்ஜ் டீம்ஸ் சாம்பியன்ஷிப்ஸ்-ஸின் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ள நாடுகள்: ஸ்வீடன் மற்றும் போலாந்து (பெர்முடா பவுல் கோப்பை), யு.எஸ்.ஏ 2 மற்றும் பிரான்ஸ் (வெனிஸ் கோப்பை) மற்றும் யு.எஸ்.ஏ 1 மற்றும் சுவீடன் (டி’ஓர்சி கோப்பை).

    43வது உலக பிரிட்ஜ் டீம்ஸ் சாம்பியன்ஷிப்ஸ் போட்டிகள், 2017-ல் லியோன் நகரம், பிரான்ஸ் நாட்டில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai