Enable Javscript for better performance
போலந்து ஓபன் பாட்மிண்டன் 3-ஆவது சுற்றில் அஜய், குருசாய்- Dinamani

சுடச்சுட

    

    போலந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், குருசாய் தத் ஆகியோர் முன்னேறினர்.
     போலந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 25-ஆவது இடத்திலுள்ள இந்தியாவின் அஜய் ஜெயராம், ஜெர்மனியின் ஃபேபியன் ராத்தை எதிர்கொண்டார்.
     இதில், 21-14, 21-10 என்ற செட் கணக்குளில் ஜெயராம் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
     அவர், தனது அடுத்த ஆட்டத்தில் காஸ்பர் லெகிக்கியோனென்னை (ஃபின்லாந்து) எதிர்கொள்கிறார்.
     மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் குரு சாய் தத், 21-14, 21-19 என்ற செட் கணக்குளில் சீன தைபேயின் சுன்-வெய் சென்னை தோற்கடித்தார். குருசாய் தனது அடுத்த ஆட்டத்தில் உக்ரைனின் டிமிட்ரோவ் ஜவாட்ஸ்கியுடன் மோதுகிறார்.
     மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய், டென்மார்க்கின் ராஸ்முஸ் பிளாட்பெர்க்கிடம் தோல்வியைத் தழுவினார். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.சி.துளசி, உள்ளூர் வீராங்கனையான கெய்ல் மஹுலெட்டியை 20-22, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெளியேற்றினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai