சுடச்சுட

  

  வாள்வீச்சு வீராங்கனைக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி; முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

  By  சென்னை,  |   Published on : 09th October 2015 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சர்வதேச அளவில் நடைபெறும் வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்க தமிழக வீராங்கனை சி.ஏ.பவானிதேவிக்கு, ரூ.3 லட்சத்தை உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
   சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை, சி.ஏ.பவானி தேவி. அவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இந்த மாதம் வெனிசுலா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்திருந்தார்.
   அவரது கோரிக்கையை ஏற்று இரண்டு மாதங்களில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் பவானிதேவி கலந்து கொள்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக உடனடியாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவர் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துகள் என தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai