Enable Javscript for better performance
இந்திய அணியில் தோனியின் இடம் குறித்து அகர்கர் கேள்வி!- Dinamani

சுடச்சுட

    

    இந்திய அணியில் தோனியின் இடம் குறித்து அகர்கர் கேள்வி!

    By DN  |   Published on : 10th October 2015 04:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dhoni22

    கேப்டனாகவும், வீரராகவும் தோனியின் இடத்தை இந்தியத் தேர்வுக்குழு பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வியைத் தழுவியது. இதனால் டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. இந்தத் தோல்வியையடுத்து தோனி மீதான தன் விமரிசனங்களை முன்வைத்துள்ளார் அகர்கர்.

    கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

    தோனி இந்தியாவின் சிறந்த வீரர். அதே சமயம் அவர் அணியின் சுமையாக இருக்க யாரும் விரும்புவதில்லை. அவர் இன்னும் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும். இத்தனை ஆண்டுகளாக நன்றாக ஆடியதால் அவர் இப்போது மோசமாக ஆடலாம் என்கிற நிலை இருக்கக்கூடாது. கேப்டனாகவும், வீரராகவும் தோனியின் இடத்தை இந்தியத் தேர்வுக்குழு பரிசீலிக்க வேண்டும். ஒருநாள் தொடர் முடிந்தவுடன் தேர்வுக்குழுவினர் முக்கியமான முடிவுகள் சிலவற்றை எடுக்கலாம்.

    மேலும், ஒருநாள் போட்டிகளில் அவர் 4-ம் நிலையில் களமிறங்க விரும்புகிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. தோனி, தனது கிரிக்கெட்டின் கடைசிக் கால கட்டத்தில் 4-ம் நிலையில் களமிறங்குவது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. நம்மிடையே ரஹானே இருக்கிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4-ம் நிலைக்குக் கீழே ஆடக்கூடாது. என்னைப் பொறுத்தவரை ரெய்னா, தோனி ஆகியோர் 5 மற்றும் 6-வது பேட்ஸ்மேன்களாக களமிறங்குவதே சரி என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai