சுடச்சுட

    

    இந்திய கிரிக்கெட் சரியான பாதையில் செல்கிறது

    By  புது தில்லி,  |   Published on : 10th October 2015 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    22

    இந்திய கிரிக்கெட் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
     அண்மையில் வெளிவந்துள்ள ஆங்கில இதழ் ஒன்றுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
     அர்ப்பணிப்பு தேவை: இந்திய கிரிக்கெட் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் நமது வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக முன்னேற்றத்திற்கு இடம் இருக்கிறது. காலப்போக்கில் அது கைகூடும்.
     வீரர்கள் கவனத்தை இழக்கக்கூடாது. நாட்டு மக்கள் அனைவரும் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் அல்லது அதற்கு நெருக்கமாகச் செல்ல வேண்டும். இதற்கு நிறைய அர்ப்பணிப்பு தேவை.
     இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சில் தடுமாறுகிறார்களா என்று கேட்கிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. முன்பெல்லாம் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் நிறைய நேரங்களை செலவழிப்பதற்கு போதிய வாய்ப்பு கிடைக்காது. ஆனால், ஐபிஎல் போட்டியின் மூலம் ஒவ்வொரு நாட்டு அணியின் சிறந்த 4 அல்லது 5 வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இடம்பெறுகிறார்கள்.
     அவர்களுடன் பயிற்சியாளர்களும் சேர்ந்து இந்திய சூழ்நிலையில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர். இது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. டர்பன் மற்றும் பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். இதனால், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்படுகின்றனர் என்று கூறிவிட முடியுமா?
     2-ஆவது இன்னிங்ஸ்: இலக்கை அடைய வேண்டும், போட்டிகளில் வெற்றி பெறவேண்டும். அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் எனது செயல்பாடு நிறைவாக இருந்தது. எனது வாழ்க்கையின் மறுபாதி அதாவது இரண்டாவது இன்னிங்ஸ் என்பது மனநிறைவ பற்றியதாகும்.
     பின்தங்கியவர்களுக்காக எதையாவது செய்ய விரும்புகிறேன். அந்த வகையில் என்னால் இயன்ற சில பணிகளை செய்து வருகிறேன். கிரிக்கெட் மீது எனக்கிருக்கும் பிணைப்பை விடுவிக்க இயலாது.
     இந்த விளையாட்டை எப்போதும் நேசித்து வருகிறேன். கிரிக்கெட் தவிர கால்பந்து, கபடி, பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளையும் பின்தொடர்கிறேன். ஆனால், இவற்றில் (கால்பந்து தவிர) எந்த அணிகளுக்கும் உரிமையாளராக இல்லை என்றார்.
     மற்றொரு புத்தகம்? விளையாட்டு தொடர்பான மற்றொரு புத்தகம் எழுதும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, "முதல் புத்தகமே மிகப் பெரிய சவாலாக இருந்தது. 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நினைவு கூர்வது என்பது சுலபமானதல்ல. அதேபோல எவற்றை எடுத்துக் கொள்வது, எவற்றை விட்டுவிடுவது என்பதை முடிவு செய்வதும் கடினமானது. வேண்டுமானால் ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன். அவ்வாறு எழுதினால் அது மனம் பற்றியதாக இருக்கும். ஆனால், அதனை எழுதுவேனா என்பது எனக்குத் தெரியாது' என்றார் சச்சின்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai