Enable Javscript for better performance
சீன ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி- Dinamani

சுடச்சுட

    

    சீன ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி

    By  பெய்ஜிங்,  |   Published on : 10th October 2015 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    19

    சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி முன்னேறியுள்ளது.
     சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் சென் லியாங் - யபாஃன் வங் ஜோடியை எதிர்கொண்டது.
     ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
     கேஸி டெலக்குவா (ஆஸ்திரேலியா) - யாராஸ்லாவா ஷிவிடோவா (கஜகஸ்தான்) மற்றும் சீன தைபேயின் ஹா சிங் சான் - யங் ஜன் சான் ஜோடிகளிடையே நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் ஜோடியுடன் இறுதிச் சுற்றில் சானியா ஜோடி விளையாடும்.
     இந்த சீசனில் விம்பிள்டன், யு.எஸ். ஓபன் ஆகிய 2 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் உள்பட சானியா ஜோடி மொத்தம் 7 போட்டிகளில் சாம்பியனாகி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் அது 8-ஆவது மகுடமாக அமையும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai