சுடச்சுட

    

    டச்சு ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் அஜய், குருசாய்

    By  அல்மீரி,  |   Published on : 10th October 2015 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், குருசாய் தத் ஆகியோர் முன்னேறினர்.
     டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி, நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், ஃபின்லாந்து நாட்டு வீரர் காஸ்பர் லெஹிகியோனென்னை எதிர்கொண்டார்.
     31 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், 21-14, 21-13 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 25-ஆவது இடத்திலுள்ள ஜெயராம் வெற்றி பெற்றார். அவர் தனது காலிறுதி ஆட்டத்தில் மலேசியாவின் இஸ்கண்டர் ஜூல்கார்னெய்னை எதிர்கொள்கிறார்.
     மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்திலுள்ள இந்திய வீரர் குருசாய் தத், உக்ரைனின் டிமிட்ரோவ் ஜவாட்ஸ்கியை 21-12, 21-11 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். குருசாய், தனது காலிறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்திலுள்ள எஸ்தோனியாவின் ரால் மஸ்ட்டுடன் மோதுகிறார்.
     ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி - சுமீத் ரெட்டி ஜோடி, நெதர்லாந்தின் மார்க் கல்ஜோவ் மற்றும் ஜெல்லி மாஸ் ஜோடியை 21-13, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.சி.துளசி, அயர்லாந்தின் சோல் மாகியிடம் 19-21, 23-21, 19-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் போராடி தோல்வியைத் தழுவினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai