Enable Javscript for better performance
டெஸ்ட் ஹாக்கி: நியூஸிலாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    டெஸ்ட் ஹாக்கி: நியூஸிலாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

    By  கிறைஸ்ட்சர்ச்,  |   Published on : 10th October 2015 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    33

    நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கிப் போட்டியில் கடைசி நேரத்தில் தரம்வீர் சிங் அபாரமாக கோல் அடிக்க, இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
     நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி, அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஹாக்கி தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் நியூஸிலாந்தும், 2-ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தன.
     இந்நிலையில் 3-ஆவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்டத்தின் 10-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பொனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரூபிந்தர் பால் சிங் முதல் கோலை அடித்து இந்திய அணியை முன்னிலைப் பெறச் செய்தார்.
     ஆரம்பத்திலேயே பின்தங்கிய நியூஸிலாந்தின் முயற்சிகளை இந்திய தடுப்பாட்டக்காரர்கள் முறியடித்தனர். இருப்பினும் 22-ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்து முதல் கோலை அடித்தது. முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன.
     இரண்டாவது பாதியில், 41-ஆவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
     இதேபோல 52-ஆவது நிமிடத்தில் எதிரணியின் ஸ்டீவ் எட்வர்ட் ஒரு கோல் அடித்து 2-2 என்ற கணக்கில் மீண்டும் சமநிலையை ஏற்படுத்தினர்.
     கடைசி நேரத்தில் (60-ஆவது நிமிடம்) அபாரமாக விளையாடிய தரம்வீர் சிங், ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டநேர இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai