சுடச்சுட

    

    தொழில் முறை குத்துச்சண்டையில் முதல் போட்டி: பிரிட்டன் வீரருடன் இன்று மோதுகிறார் விஜேந்தர் சிங்

    By  மான்செஸ்டர்,  |   Published on : 10th October 2015 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    24

    தனது முதலாவது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் சிங், பிரிட்டனின் சோனி ஒயிட்டிங்குடன் சனிக்கிழமை மோதுகிறார்.
     இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் அமெச்சூர் போட்டிகளிலிருந்து, தொழில் முறை குத்துச் சண்டை போட்டிக்கு மாறியுள்ளார். அமெச்சூர் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற இவர், தொழில் முறை குத்துச் சண்டையில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார்.
     உலகப்போர்-3: பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் சனிக்கிழமை இரவு 10.20 (இந்திய நேரப்படி) மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் உள்ளூர் வீரரான சோனி ஒயிட்டிங்கை தனது முதல் தொழில் முறை குத்துச் சண்டை போட்டியில் எதிர்கொள்கிறார்.
     "உலகப் போர்-3' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனி வொயிட்டிங்குக்கு இது 4-ஆவது தொழில்முறை போட்டியாகும். இதற்கு முன்னர் அவர், 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வி கண்டுள்ளார். இந்தியா சார்பில் இதற்கு முன்னர் குருசரண் சிங் மற்றும் பிரதீப் ஷிஹாக் ஆகியோர் ஏற்கெனவே தொழில்முறை போட்டிகளில் பங்கெடுத்திருந்தாலும், விஜேந்தரின் போட்டிதான் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     "தொழில் முறை குத்துச் சண்டை போட்டியை தொடங்கவிருக்கும் விஜேந்தருக்கு கசப்பான வரவேற்பை கொடுக்கப் போகிறேன். அமெச்சூர் போட்டிகளில் அவர் என்ன செய்தார் என்பது இங்கு கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், அவர் தற்போது தொழில்முறை ஜாம்பவான்களோடு மோதப் போகிறார்' என்று சோனி ஒயிட்டிங் முரட்டுத் தனமாக கூறியிருக்கிறார்.
     நேரடி ஒளிபரப்பு: "போட்டியின் போது சோனி ஒயிட்டிங்குக்கு பதிலடியை கொடுக்கும் சரியான தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரின் விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை. குத்துவிடுவதன் மூலம் அவருக்கு பதிலளிப்பேன்' என்று கூறியிருக்கிறார் விஜேந்தர். 4 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில் விஜேந்தர் பங்கேற்க வருகையில், "சிங் இஸ் கிங்', "சிங் இஸ் பிளிங்' என்ற பாடல்களை இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியை சோனி சிக்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai