சுடச்சுட

    
    23

    ஆர்ஜெண்டினா கால்பந்து அணி வீரர் லயோனல் மெஸ்ஸி, அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி ஆகியோர் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளனர்.
     கடந்த 2007-2009 வரையிலான காலகட்டத்தில் பெலிஸி மற்றும் உருகுவேயில் போலியான நிறுவனங்களைக் கொண்டு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமம் வழங்கியதில் (ரூ.30 கோடி) வரிஏய்ப்பு செய்ததாக லயோனல் மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
     மேற்கண்ட நிறுவனங்களுக்கு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமையை வழங்கி, அதன்மூலம் ஸ்பெயின் நாட்டில் ஸ்பான்ஸர்களால் கிடைக்கும் தொகையை வெளியே தெரியாதவாறு செயல்பட்டுள்ளனர் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.
     ஆனால், மெஸ்ஸியின் வழக்கறிஞர்கள், "மெஸ்ஸியின் தந்தையால் இந்த தவறு நிகழ்ந்திருப்பதாகவும், இதனால் மெஸ்ஸியை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்' என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
     சிறை தண்டனை?: ஆனால், வரிமான வரித்துறை தரப்பு வழக்கறிஞர்கள், "மெஸ்ஸி, அவரது தந்தை இருவருக்குமே இதில் தொடர்பிருக்கிறது. எனவே ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஏழரை மாதங்கள் சிறை தண்டனை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டனர்.
     இந்த கணக்கின்படி மொத்தம் 22 மாதங்கள் சிறைதண்டனை விதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
     வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, "குற்றம் சாட்டப்பட்ட இருவருக்குமே இதில் தொடர்பிருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன' என்று குறிப்பிட்டார்.
     இதற்கிடையே ஜார்ஜ் மெஸ்ஸி கூறுகையில், "மெஸ்ஸியின் நிதி விவகாரங்களை தானே கவனிப்பதாகவும், இதனால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்' என்றார்.
     இருப்பினும் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், செலுத்தப்படாத வரிகளை வட்டியோடு சேர்த்து ஜார்ஜ் மெஸ்ஸி செலுத்தினார். வழக்கில் இந்த அம்சத்தையும் நீதிபதிகள் கவனத்தில் கொள்வர் என்று தெரிகிறது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai