சுடச்சுட

  
  fifa

  சர்வதேச கால்பந்து சங்க (ஃபிஃபா) தலைவர் பதவியிலிருந்து தன்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து ஜோசப் பிளேட்டர் மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார்.

  கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் ஃபிஃபா தலைவராக பதவி வகித்து வந்த ஜோசப் பிளேட்டர் (79), கடந்த 8ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஃபிஃபா அமைப்பில் முறைகேடுகள் நடக்கும் வகையில் நிர்வாகத்தை தவறாக வழிநடத்தியதற்காக சுவிட்சர்லாந்து நாட்டு அதிகாரிகள் அவர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் பிளேட்டர், ஐரோப்பிய கால்பந்து சங்க (யுஇஎஃப்ஏ) தலைவர் மைக்கேல் பிளாட்டினி,

  ஃபிஃபா பொதுச் செயலாளர் ஜெரோம் வால்கி, கௌரவ துணைத் தலைவர் சங் மங்-ஜூன் ஆகிய நால்வரையும் 90 நாள்களுக்கு இடைநீக்கம் செய்வதாக ஃபிஃபாவின் தன்னாட்சிமிக்க நீதி விசாரணை குழு அறிவித்தது.

  இதன் தொடர்ச்சியாக ஃபிஃபாவில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்க அந்த அமைப்பின் அசாதாரண செயற்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி கூடுகிறது.

  இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்க வாய்ப்பு தராமலே தன்னாட்சி குழு இடைநீக்க முடிவை எடுத்திருப்பதாகவும், அதனை எதிர்த்து மேல் முறையூடு செய்ய பிளேட்டர் முடிவு செய்துள்ளதாகவும் அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இதேபோல மைக்கேல் பிளாட்டினியும் மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளார். இதற்கிடையே, ஃபிஃபாவின் தன்னாட்சிமிக்க நீதி விசாரணைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரியாஸ் பேன்டெல் கூறுகையில், "பிளேட்டர் தரப்பு வாதத்தை முன்வைக்க கடந்த 1ஆம் தேதி அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai