சுடச்சுட

  

  உலக செஸ் போட்டிமீண்டும் சாம்பியனாவாரா ஆனந்த்?

  By பெர்லின்  |   Published on : 11th October 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Anand

  பெர்லினில் நடைபெற்று வரும் உலக செஸ் போட்டியில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை பெறும் முனைப்பில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார்.

  2015 ஆம் ஆண்டுக்கான உலக "ராபிட்' மற்றும் "பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொடங்கியுள்ளன. வரும் 14ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

  மொத்தம் ரூ.1.30 கோடி பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவருக்கு ரூ.26 லட்சம் பரிசாக கிடைக்கும். பிளிட்ஸ் பிரிவு போட்டி 21 சுற்றுகளைக் கொண்டது. ராபிட் பிரிவு போட்டி 15 சுற்றுகளை கொண்டது.

  அனைத்துவித பிரிவுகளிலும் சாம்பியனாக திகழும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் குறிக்கோளில் உள்ளார்.

  5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், மீண்டும் உலக சாம்பியன் மகுடத்தை சூடுவாரா என்று இந்தியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

  இவர்கள் தவிர அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ஃபேபியானோ கருணா ஆகியோர் லாஸ் வேகாஸில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பங்கேற்பதால் இதில் கலந்துகொள்ளவில்லை.

  இருப்பினும் ஆர்மேனியாவின் லீவான் ஆரோனியன், உக்ரைனின் வாஸிலி இவான்சுக், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களும் கலந்து கொள்ள இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆனந்த் தவிர, இந்தியா சார்பில் பி.ஹரிகிருஷ்ணா, கிருஷ்ணன் சசி கிரண், பி.அதிபன், விதித் குஜராத்தி, எஸ்.பி.சேதுராமன்,

  சூர்ய சேகர் கங்குலி போன்றவர்களும் பங்கேற்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai