சுடச்சுட

    

    ஐஎஸ்எல் கால்பந்து:மும்பை - கேரள அணிகள் மோதிய ஆட்டம் "டிரா'

    By கொச்சி  |   Published on : 11th October 2015 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    isl

    இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற மும்பை - கேரள அணிகள் இடையிலான ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிந்தது.

    ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதின. வடகிழக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேரள அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்குவகித்த ஜோசு, முகமது ரஃபி ஆகியோருக்குப் பதிலாக விக்டர் புல்கா, மனன்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர். நடுக்கள வீரர் பீட்டர் கர்வால்ஹோ காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக குர்விந்தர் சிங்குக்கு கேரள அணி வாய்ப்பளித்தது.

    இதேபோல, மும்பை அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சோனி நோர்டி, விதிமுறைக்கு மாறாக குறுக்கே புகுந்து பந்தை தடுத்து இடையூறு ஏற்படுத்தினார்.

    நழுவிய வாய்ப்பு:

    4-ஆவது நிமிடத்தில் கேப்ரியல் ஃபெர்னாண்டஸ் அடித்த பந்து கம்பத்துக்கு மேலே சென்றது. இதனால், கேரள வீரர்கள் திருப்தி அடைந்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி முன்னிலை பெறுவதற்கு 12-ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பு நழுவியது. ஃப்ரீ கிக்கில் நோர்டி அடித்த பந்தை, சுபாஷ் சிங் இலக்கை நோக்கி திருப்பினார். அப்போது துரிதமாக செயல்பட்ட கேரள பிளாஸ்டர்ஸ் கோல் கீப்பர் பேவாட்டர், அதனை தடுத்தார்.

    களத்தில் நீண்ட தூரத்திலிருந்து மும்பை வீரர் ராகுல் பெகி அடித்த ஷாட்டுகளுக்கு அரங்கில் குழுமியிருந்த ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. ஆனால், பெகியின் ஷாட்டுகளை மும்பை அணியின் பெர்டின், சிமாவ்ஸ் வெற்றிகரமாக தடுத்தனர்.

    18-ஆவது நிமிடத்தில் புல்கா மும்பை அணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டதையடுத்து, கோல் கீப்பர் தேவ்ஜீத் மஜும்தார் உஷாரானார். இருப்பினும் அந்த நிமிடத்திலும் கோல் கிட்டவில்லை.

    டிராவில் முடிந்தது:

     நோர்டியின் ஆட்டம் மும்பை அணிக்கு மிகவும் கைகொடுத்தது. எதிரணியில் ஜோசு இல்லாவிட்டாலும் நடுக்கள வீரர்கள் சிறப்பாக விளையாடி அந்த குறையை நிவர்த்தி செய்தனர். 30-ஆவது நிமிடத்தில் சுபாஷ்சிங் அபாரமாக பந்தை விரட்டினார். ஆனால், பீட்டர் ராமேஜ் அதனை கோலாகவிடாமல் தடுத்தார். இதனால் முதல் பாதியில் கோல்கள் எதுவும் பதிவாகவில்லை.

    இரண்டாவது பாதியிலும் இதேபோல முயற்சிகள் கைகூடுவதும், அதனை முறியடிப்பதுமாக ஆட்டம் நகர்ந்தது. இதனால் வழக்கமான ஆட்டநேர முடிவில் கோல்கள் இன்றி இரு அணிகளும் சமநிலை வகித்தன. பின்னர் வழங்கப்பட்ட 4 நிமிட கூடுதல் நேரமும் கோல்களே இன்றி நகர முடிவில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

     

    இன்றைய ஆட்டம்

    எஃப்சி கோவா சென்னையின் எஃப்சி

    நேரம் : இரவு 7 மணி, இடம்: கோவா

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai