Enable Javscript for better performance
சீன ஓபன் டென்னிஸ்:சானியா - ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    சீன ஓபன் டென்னிஸ்:சானியா - ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

    By பெய்ஜிங்  |   Published on : 11th October 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SANIAMIRZA

    சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் கோப்பையை வென்றது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தைபேயின் ஹா சிங் சன் - யங் ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சானியா - ஹிங்கிஸ் ஜோடி, தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள தைபே நாட்டு ஜோடியை 6-7 (9), 6-1, 10-8 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தியது.

    டைபிரேக்கர் சுற்றில் இரண்டு தரப்பினரும் ஒரு கட்டத்தில் 7-7 என்ற கணக்கில் சரிசமமாக ஆதிக்கம் செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், சானியா ஜோடி அடுத்த நான்கு புள்ளிகளில் மூன்றை தன்வசமாக்கி வெற்றியை எளிதாக்கியது.

    8-ஆவது முறையாக சாம்பியன்: கடைசி நான்கு தொடர்களின் 17 ஆட்டங்களில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி 2 செட்களை மட்டுமே இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து கைப்பற்றும் 8-ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    இந்தியன் வெல்ஸ், மியாமி, சார்லெஸ்டன், விம்பிள்டன், யு.எஸ். ஓபன், குவாங்ஜு, உஹான் மற்றும் தற்போது சீன ஓபன் ஆகிய 8 தொடர்களில் தங்களது வெற்றி முத்திரையை சானியா - ஹிங்கிஸ் ஜோடி பதித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai