சுடச்சுட

  
  modi-har

  இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தார். பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவுடன் அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெறும் தனது திருமணத்துக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹர்பஜன் அழைப்பு விடுத்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

  இச்சந்திப்பின் போது கீதா பாஸ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் பெயரின் முதல் எழுத்து பொறிக்கப்பட்ட திருமண அழைப்பிதழை ஹர்பஜன் பிரதமரிடம் அளித்தார். எனினும், திருமணத்துக்குப் பிரதமர் செல்வது தொடர்பான எந்த உறுதியும் வழங்கப்படவில்லை என்று அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai