சுடச்சுட

  

  டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் எஸ்தோனியா நாட்டு வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் அஜய் ஜெயராம்.
   டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் நெதர்லாந்தில் நடைபெற்றன. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், எஸ்தோனியாவின் ரால் மஸ்ட்டை எதிர்கொண்டார்.
   34 நிமிடங்களில் இப்போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார் அஜய் ஜெயராம். உலகத் தரவரிசையில் 26-ஆவது நிமிடத்திலுள்ள அவர், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள ரால் மஸ்ட்டை 21-12, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
   இது குறித்து ஜெயராமின் பயற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், "காயத்திலிருந்து மீண்டு கொரிய ஓபன், டச்சு ஓபன் ஆகிய இரண்டு தொடர்களில் அடுத்தடுத்து இறுதிச் சுற்று வரை ஜெயராம் முன்னேறியது சிறப்பான விஷயம்.
   இந்த வெற்றி, வரவிருக்கும் தொடர்களில் அவரின் நம்பிக்கையை அதிகரிக்கும். இதே திறமையை ஜெயராம் தொடரும்பட்சத்தில் அவருக்கு நிச்சயமாக ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai