சுடச்சுட

  

  தொழில் முறை குத்துச்சண்டை: வெற்றியுடன் தொடங்கினார் விஜேந்தர் சிங்

  By  மான்செஸ்டர்,  |   Published on : 12th October 2015 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  21

  இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர் சிங், தனது தொழில் முறை குத்துச்சண்டை வாழ்க்கையை வெற்றியுடன் தொடங்கினார்.
   இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற தொழில் முறை குத்துச்சண்டை போட்டியின் "மிடில் வெயிட்' பிரிவில் இந்தியாவின் விஜேந்தர் சிங், பிரிட்டனின் சோனி ஒயிட்டிங்குடன் மோதினார். தொழில் முறை குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங்குக்கு இது முதல் போட்டியாகும். இப்போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில் கடந்த ஒரு மாத காலமாக பிரிட்டனில் அவர் பயிற்சி எடுத்து வந்தார்.
   மேவெதர் போன்ற பிரபல வீரர்களுக்கு பயிற்சியளித்த லீ பியர்டிடம் விஜேந்தர் பயிற்சி பெற்றார். இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே விஜேந்தரும், சோனி ஒயிட்டிங்கும் வார்த்தைப் போரில் ஈடுபட ஆரம்பித்தனர். அதற்கு தகுந்தாற்போலவே "உலகப்போர்-3' என்ற பெயரில் இந்த போட்டியை பிரபலப்படுத்தினர். அரங்கிற்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
   தலா 3 நிமிடங்கள் கொண்ட 4 சுற்றுகள் உடைய இப்போட்டியில் 3-ஆவது சுற்றிலேயே தொழில்நுட்ப (நாக் அவுட்) அடிப்படையில் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றார். முதல் இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த விஜேந்தர், 3-ஆவது சுற்றில் சோனி ஒயிட்டிங்கின் முகத்தில் தீவிரமாக குத்துவிட்டார். அப்போது நடுவர் குறுக்கிட்டு ஒயிட்டிங்கை காப்பாற்றினார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டியை வெற்றியுடன் தொடங்கிய விஜேந்தர் சிங் கூறுகையில், "எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இது எனக்கு புதிய தொடக்கம். ஆனால், இதற்காக கடினமாக உழைத்திருக்கிறேன். வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். அது நடந்திருக்கிறது. வரும் 30 ஆம் தேதி அடுத்த போட்டியில் பங்கேற்க உள்ளேன்' என்றார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai