சுடச்சுட

  

  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரை வென்றது இந்திய அணி

  By  புது தில்லி,  |   Published on : 12th October 2015 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா - நியூஸிலாந்து இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி டெஸ்ட் ஹாக்கி போட்டி டிராவில் முடிந்தது. இதன்மூலம், இத்தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
   நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஹாக்கி தொடரில் பங்கேற்றது.
   இதன் முதல் போட்டியில் நியூஸிலாந்தும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தன.
   இந்நிலையில் 4-ஆவது மற்றும் கடைசிப் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   சமநிலை: முதல் பாதியில் இந்திய அணியே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய கேப்டன் சர்தார் சிங் ஆரம்பத்திலேயே எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தினார். இலக்கை நோக்கி அவர் அடித்த பந்தை அலெக்ஸ் ஷா அற்புதமாக தடுத்தார்.
   11-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ரூபிந்தர் பால் சிங் அடித்த பந்து, கோல் பகுதியை விட்டு விலகிச் சென்றது. இதேபோல ஆகாஷ்தீப் சிங்கும் ஒரு வாய்ப்பை நழுவவிட்டார்.
   தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தரம்வீர் சிங் அடித்த பந்தை நியூஸிலாந்து கோல் கீப்பர் தடுத்தார். இதனால் முதல் பாதியில் கோல்கள் எதுவுமின்றி இரு அணிகளும் சமநிலை வகித்தன.
   தொடரை வென்றது இந்தியா: இரண்டாவது பாதியின் 41-ஆவது நிமிடத்தில், ஸ்டீவ் எட்வர்ட்ஸ் பாஸ் செய்தா பந்தை நிக் ராஸ் கோலாக மாற்றினார். இதனால் நியூஸிலாந்து அணி முன்னிலைப் பெற்றது. அடுத்த 2 நிமிடங்களிலேயே இந்திய அணி இதற்கு பதிலடி கொடுத்தது. 43-ஆவது நிமிடத்தில் எஸ்.வி.சுனில் அபாரமாக "ஃபீல்டு கோல்' அடித்தார்.
   இதனால் இரு அணிகளும் மீண்டும் சமநிலை பெற்றன. இதன் பிறகு கூடுதலாக கோல் எதுவும் பதிவாகவில்லை. இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஹாக்கித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai