சுடச்சுட

    

    மெண்டோஜா ஹாட்ரிக் கோல்: வெற்றிப் பயணத்தை தொடங்கியது சென்னை

    Published on : 12th October 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    22

    எஃப்சி கோவா அணிக்கு எதிரான இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் மெண்டோஜா ஹாட்ரிக் கோல் அடித்து உதவ, சென்னையின் எஃப்சி அணி 4-0 என்ற கோல் கணக்கில் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியது.
     ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. கடந்த இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது.
     கோவா அணியின் வீரர்களில் எந்த விதமாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் சென்னை அணியில் 4 வீரர்கள் மாற்றப்பட்டனர். ஜெயேஷ் ரானே, ரஃபேல் அகஸ்டோ, மெஹர்ஜுதீன், மெயில்சன் ஆல்வ்ஸ் ஆகியோருக்குப் பதிலாக மேனுலி பிளாசி, அபிஷேக் தாஸ், பல்வந்த் சிங், அலெஸ்சான்ட்ரே பொடென்ஜா ஆகியோருக்கு மார்கோ மெட்ராஸி (சென்னையின் எஃப்சி பயிற்சியாளர்) வாய்ப்பளித்தார்.
     சென்னை அணிக்கு மெண்டோஜா (10, 63, 75-ஆவது நிமிடங்கள்) ஹாட்ரிக் கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
     அவர் தவிர கேப்டன் இலானோ புளூமர் 43-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, முடிவில் 4-0 என்ற கணக்கில் சென்னை அணி, அபார வெற்றி பெற்றது.
     இந்த தொடரில் மெண்டோஜோ முதல் ஹாட்ரிக் கோலை பதிவு செய்துள்ளார். ஆட்டத்தின் முதல் கோலை அவர் போட்டதும், உள்ளூர் அணியான கோவா எஃப்சிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி உண்டானது. அதற்கு தகுந்தாற்போல் அந்த அணியின் நடுக்களம் மற்றும் தடுப்பாட்ட பொறுப்பை ஏற்றிருந்த வீரர்கள் எதிரணியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவில்லை. முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை பெற்றது.
     தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கோவா அணிக்கு மாற்றுவீரராக களமிறக்கப்பட்ட சி.எஸ்.சபீத் அடித்த பந்து, கம்பத்தில் பட்டு விலகியது. கோவா பயிற்சியாளர் ஜிகோ காயம் காரணமாக 3 வீரர்களை மாற்றினார்.
     அப்படியிருந்தும் தடுப்பாட்டக்காரர் லூசியோ கடைசி நேரத்தில் காயமடைந்ததால், இறுதிகட்டத்தில் கோவா அணி 10 வீரர்களைக் கொண்டே விளையாடியது.
     இருப்பினும் அந்த அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இத்தொடரில் திங்கள்கிழமை ஓய்வு நாளாகும்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai