சுடச்சுட

    

    38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தார் பீலே: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

    By கொல்கத்தா,  |   Published on : 12th October 2015 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    62

    பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே (74) ஞாயிற்றுக்கிழமை காலை கொல்கத்தா வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் இந்திய முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    "கால்பந்தின் அரசன்' , "கருப்பு வைரம்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பீலே. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர், மூன்று முறை உலகக் கோப்பை வென்ற அணியில் பங்கேற்ற பெருமையுடையவர்.
    கடந்த 1977ஆம் ஆண்டு கொல்கத்தாவில், நடைபெற்ற மோகன் பகான் அணிக்கு எதிரான கண்காட்சி கால்பந்து போட்டியில் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே விளையாடினார். அந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. அதன் பிறகு 38 ஆண்டுகள் கழித்து, பீலே இந்தியாவுக்கு வந்துள்ளார்.
    கொல்கத்தா விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்த அவருக்கு இந்திய முன்னாள் வீரர்கள் கோஸ்வாமி, திபெண்டு பிஸ்வாஸ் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ரசிகர்கள் "பீலே, பீலே' என்று உற்சாகத்துடன் முழக்கமிட்டனர். பின்னர் அலிப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். வரும் 16 ஆம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பீலே கலந்துகொள்கிறார். கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் உள்ளூர் அணியான அட்லெடிகோ டி கொல்கத்தாவும், கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் பீலே, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர். இவர்களுடன் ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் காணொலி காட்சி மூலம் இணைகிறார்.




     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai