சுடச்சுட

    

    உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: வெற்றி பெறுமா இந்தியா?

    Published on : 13th October 2015 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    17

    உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, ஓமன் அணியை எதிர்கொள்கிறது. வரிசையாக தோல்வி அடைந்து வரும் இந்திய அணி இந்த ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
     ரஷியாவில் வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
     ஆசிய கண்டத்தில் ஓமன், ஈரான், துர்க்மேனிஸ்தான், குவாம் ஆகிய அணிகளுடன் இந்திய அணி "டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.
     இப்பிரிவில் இந்திய அணி மட்டுமே இன்னும் ஒரு புள்ளி கூட பெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் 2-ஆவது கட்ட தகுதிச் சுற்றில் கடந்த 8ஆம் தேதி துர்க்மேனிஸ்தானிடம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.
     வரிசையாக 4 போட்டிகளில் தோல்வி கண்டு இந்தியா "டி' பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.
     கிட்டத்தட்ட வாய்ப்பை பறிகொடுத்துவிட்ட இந்திய அணி, இனி நடைபெறும் ஆட்டங்களில் பெருமையை தக்கவைத்துக் கொள்ளவாவது சில வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. மஸ்கட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் தரவரிசையில் 167-ஆவது இடத்திலுள்ள இந்திய அணி, தரவரிசையில் 102-ஆவது இடத்திலுள்ள ஓமன் அணியை எதிர்கொள்கிறது.
     இதற்கு முன்னர் கடந்த ஜூன் 11ஆம் தேதி பெங்களூரில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியிருந்தது.
     இந்நிலையில், ஓமன் அணியை மீண்டும் அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai