Enable Javscript for better performance
ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது: அமித் மிஸ்ரா- Dinamani

சுடச்சுட

    

    ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது: அமித் மிஸ்ரா

    By  கான்பூர்,  |   Published on : 13th October 2015 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14

    ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்று சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்தார்.
     கான்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, 10 ஓவர்கள் பந்துவீசி 47 ரன்கள் விட்டுக்கொடுத்து ஹஷிம் ஆம்லா, டேவிட் மில்லர் ஆகிய இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தினார்.
     புது தில்லியைச் சேர்ந்த அமித் மிஸ்ரா, டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றாலும் நீண்ட நாள்களுக்குப் பின்னர் ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவர் கடைசியாக கடந்த ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.
     இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியுடனான ஆட்டம் குறித்து திங்கள்கிழமை மிஸ்ரா கூறியதாவது:
     மகிழ்ச்சியளிக்கிறது: நீண்ட நாள்களுக்குப் பின்னர் ஒரு நாள் போட்டி அணியில் இடம் பெற்றதும், அதில் சிறப்பாக பந்துவீசியதும் மகிழ்ச்சியளிக்கிறது. வரவிருக்கும் ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் எனது சிறந்த திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறேன்.
     இந்தியாவுக்காக எப்போது விளையாடினாலும் தன்னம்பிக்கையுடன் விளையாடவேண்டும் என்பது எனது விருப்பம். விக்கெட் வீழ்த்துகிறோமோ இல்லையோ சிறப்பாக பந்துவீச வேண்டும். அதேநேரத்தில் சரியான பகுதியில் பந்தை "பிட்ச்' செய்ய வேண்டும்.
     தற்போதை நிலையில் எனது பந்துவீச்சு எனக்கு திருப்தியளிக்கிறது. சூழலுக்கு தகுந்தவாறு பந்துவீசி, நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
     பந்துவீச்சு திட்டம்: ஆம்லாவின் பேட்டிங்கை நாங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளோம். "ஸ்ட்ரைட்' திசையில் வீசிய பந்துகளை எதிர்கொள்வதில் ஆம்லா சிரமப்படுவதை அறிந்து அதே போன்று பந்துவீசி அவரின் விக்கெட்டை வீழ்த்தினோம்.
     மில்லர், எனது பந்துவீச்சில் நிறைய ரன் குவிக்க முயன்றார். ஆனால், அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ரன் குவிக்க இடமளிக்கக் கூடாது என்பதே எனது திட்டம். அதிர்ஷ்டவசமாக இறங்கி அடிக்க முயன்று ஸ்டம்ப்பிங் முறையில் அவர் விக்கெட்டை இழந்தார்.
     டி வில்லியர்ஸுக்கான பந்துவீச்சு திட்டம் எளிதானதே. ஒன்று, அவரை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது அல்லது பெரிய ஷாட்டுகளை ஆட அனுமதிக்க வேண்டும் என்றார் மிஸ்ரா.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai