Enable Javscript for better performance
கோவையில் இளையோர் மாநில தடகளப் போட்டி: அக்டோபர் 16-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இளையோர் மாநில தடகளப் போட்டி: அக்டோபர் 16-இல் தொடக்கம்

    By  கோவை,  |   Published on : 13th October 2015 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளையோருக்கான 29-ஆவது மாநிலத் தடகளப் போட்டிகள் கோவையில் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது.
     இதுகுறித்து கோவை மாவட்டத் தடகளச் சங்கத் தலைவர் மருத்துவர் எல்.பி. தங்கவேலு கூறியதாவது:
     தமிழ்நாடு தடகளச் சங்கம், கோவை மாவட்டத் தடகளச் சங்கம் சார்பில் 29-ஆவது மாநில இளையோர் தடகளப் போட்டிகள்-2015, கோவை நேரு விளையாட்டு அரங்கில் அக்டோபர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
     ஆடவர், மகளிர் என தனித்தனியாக 14, 16, 18, 20 வயதுக்கு உள்பட்டோர் பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெறும். இதில் மாநிலம் முழுவதுமிருந்து 4,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
     இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர் நவம்பர் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ராஞ்சியில் நடைபெறவுள்ள தேசியத் தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாடு அணிக்குத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோவை நேரு விளையாட்டு அரங்கை ரூ.6 லட்சத்தில் மைதானத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலை 6 முதல் இரவு 9 மணி வரை போட்டிகள் நடைபெறும். முதன்முறையாக மின்னொளியில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. வீரர்களுக்கான தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போட்டிகளை நடத்தும் பணியில் 350 நடுவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
     மொத்தமாக ரூ.15 லட்சம் வரை போட்டிகளை நடத்த செலவிடப்படவுள்ளது. தொடக்க விழாவில் மாநிலத் தடகளச் சங்கத் தலைவர் தேவாரம் கலந்து கொள்கிறார். 18-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலத் தடகளத் சங்கத் தலைவர் தேவாரம், செயலாளர் டி.கே.ராஜேந்திரன், துணைத் தலைவர் சைலேந்திர பாபு, கோவை மேயர் ப.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai