சுடச்சுட

  
  16

  டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாதிக்கும் முனைப்பில் இந்திய வீரர், வீராங்கனைகள் உள்ளனர்.
   ரூ.4 கோடி பரிசுத் தொகை கொண்ட டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டி, டென்மார்க்கின் ஓடென்சி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
   கடந்த 2012 ஆம் ஆண்டில் இப்போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தற்போது மீண்டும் சாம்பியனாகும் முனைப்பில் அவர் இப்போட்டியில் பங்கேற்கிறார்.
   உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சாய்னா நெவால், இந்தியன் சூப்பர் சீரிஸ், சையத் மோடி கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு ஆகிய பாட்மிண்டன் தொடர்களில் சாம்பியனாகிஉள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம், ஆல் இங்கிலாந்து தொடரில் 2-ஆம் இடம் என அவர் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர். புதன்கிழமை நடைபெறும் முதல் சுற்றில் சாய்னா, தாய்லாந்தின் புசானனை எதிர்கொள்கிறார்.
   அண்மையில் டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில், அஜய் ஜெயராம் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதற்கு முன்னர் நடைபெற்ற கொரிய ஓபன் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
   சிறந்த ஃபார்மில் உள்ள அவர், இப்போட்டியிலும் சர்வதேச வீரர்களுக்கு சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜெயராம் தகுதிச் சுற்றின் மூலமே பிரதான சுற்று வாய்ப்பை பெறவேண்டியுள்ளது. அவர் தனது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் ஃபேபியன் ராத்தை எதிர்கொள்கிறார்.
   உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 5-ஆம் இடம் வகிக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த், காமன்வெல்த் சாம்பியன் பாரப்பள்ளி காஷ்யப், எச்.எஸ்.பிரணாய் ஆகியோரும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
   இவர்கள் தவிர, ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு அத்ரி - சுமித் ரெட்டி ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் காமன்வெல்த் சாம்பியனான ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் இந்திய சார்பில் பங்கேற்கின்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai