சுடச்சுட

    

    தாமதமாக பந்துவீச்சு: தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அபராதம்

    By  புது தில்லி,  |   Published on : 13th October 2015 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வழக்கமான நேரத்தைக் கடந்து தாமதமாக பந்துவீசியதால், தென் ஆப்பிரிக்க அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
     கான்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து 2 ஓவர்கள் தாமதமாக வீசியதற்காக தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.
     இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தாமதமாக பந்துவீசியதற்காக தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸுக்கு அவரது ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதமும், அந்த அணியின் மற்ற வீரர்களுக்கு அவர்களின் ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     வழக்கமான நேரத்தைவிட தாமதமாகப் பந்துவீசப்படும் ஒரு ஓவருக்கு வீரர்களின் ஆட்ட ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. இதில் கேப்டனுக்கு மட்டும் இரண்டு மடங்கு அபராதமாகும். அந்த அடிப்படையில் டி வில்லியர்ஸுக்கு 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டி வில்லியர்ஸ் கடந்த ஓராண்டில் இதே குற்றத்துக்காக மூன்றாவது முறையாக அபராதத்துக்கு ஆளாகியுள்ளார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai