Enable Javscript for better performance
துளிகள்...!- Dinamani

சுடச்சுட

    

    *மலேசியாவின் ஜோஹர் பஹ்ருவில் 5-ஆவது ஜோஹர் கோப்பை சுல்தான் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரிட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
     * மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் திங்கள் கிழமை தள்ளுபடி செய்தது.
     * அமெரிக்காவின் ஃபிலாடெல்ஃபியா நகரில் நடைபெற்று வரும் யு.எஸ்.ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் 2-ஆவது சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai