சுடச்சுட

  

  பீலே யார் என்று தெரியாமலே அவரது படத்துக்கு இசையமைத்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

  By  கொல்கத்தா  |   Published on : 13th October 2015 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  13

  பீலே யார் என்று தெரியாமலே அவரது படத்துக்கு இசையமைத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
   பிரேசில் நாட்டு முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே (74). இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொல்கத்தா வந்தார். பீலே, கடந்த 1977 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த மோகன் பகான் அணிக்கு எதிரான கண்காட்சி கால்பந்து போட்டியில் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடுவதற்கு இந்தியா வந்தார்.
   அதன் பிறகு 38 ஆண்டுகள் கழித்து இந்திய வந்துள்ள அவர் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறும் அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரள பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை நேரில் பார்வையிடுகிறார்.
   இந்நிலையில் ஆஸ்கார் மற்றும் கிராமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கொல்கத்தாவில் பீலேவை திங்கள்கிழமை முதன் முறையாக நேரில் சந்தித்தார். இதன் பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:
   விளையாட்டில் நான் பூஜ்ஜியம். விளையாட்டில் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மட்டுமே எனக்குத் தெரியும். பீலே யார் என்று தெரியாமலே அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு (அந்த படத்தின் பெயர் "பீலே') இசையமைத்தேன். ஆனால், அந்தப் படத்தை பார்த்தப் பிறகு 3 முறை அழுதுவிட்டேன்.
   அதன் பிறகு பீலேவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டேன். அவர், வியக்கத்தக்க ஆளுமையும், உத்வேகமும் உடையவர். பீலே படத்துக்கு நான் இசையமைக்கிறேன் என்று தெரிந்தவுடன் எனது இசையுலக நண்பர்கள் பொறாமை கொண்டனர் என்றார் ரஹ்மான். பீலே திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
   வரும் 23ஆம் தேதி தனது 75-ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் பீலேவுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனது சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பீலே, சுதீப் மல்லிக்கால் தயாரிக்கப்பட்ட உலகக் கோப்பை வடிவிலான கேக்கை வெட்டினார். இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சௌரவ் கங்குலி, ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai