சுடச்சுட

    

    அஸாருதீனுடன் பேச்சு: தில்லி கிரிக்கெட் சங்கத்திடம் விளக்கம் கேட்கிறது பிசிசிஐ

    By  புது தில்லி,  |   Published on : 14th October 2015 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    19

    தில்லிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீனுடன் விதர்பா அணி வீரர்களை பேச அனுமதித்தது குறித்து விளக்கம் கேட்டு தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கு (டிடிசிஏ) பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
     சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் அஸாருதீன் மீதான குற்றம் கடந்த 2000ஆம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், பிசிசிஐ அவருக்கு ஆயுள்கால தடை விதித்துள்ளது.
     இந்நிலையில், தில்லி-விதர்பா அணிகள் இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. டிடிசிஏ துணைத் தலைவர் சேத்தன் செüஹான் அழைப்பின் பேரில் அஸாருதீன் இந்த போட்டிக்கு வருகை தந்துள்ளார்.
     அப்போது, விதர்பா அணி வீரர்கள் வாசிம் ஜாஃபர், பத்ரிநாத், தலைமை பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் அஸாருதீனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இச்செயல் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறிய செயலாக கருத்தப்பட்டது. இதையடுத்து, டிடிசிஏவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
     இதனிடையே, பிசிசிஐ கடிதம் அனுப்பியுள்ளதை ஒப்புக்கொண்ட சேத்தன் செüஹான், இது குழப்பத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "வீரர்கள் மற்றும் ஆட்டத்தின் அதிகாரிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் தேர்வாளர்களான வினய் லம்பா, ஹரி கித்வானி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகில் அஸாருதீன் அமர்ந்திருந்தார்.
     அதனால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அஸாருதீனுடன் வீரர்கள் உரையாடக் கூடாது என்று பிசிசிஐ தெரிவித்தால், இனி நாங்கள் கவனமுடன் இருப்போம்' என்றார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai