சுடச்சுட

    

    ஆசிய உடற்கட்டு சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இந்தியாவுக்கு வெள்ளி

    By  புது தில்லி,  |   Published on : 14th October 2015 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிய உடற்கட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஷ்வேதா ரத்தோர் முதல் முறையாக வெள்ளி வென்றார்.
     இதன் மூலம் இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெறும் முதல் இந்திய உடற்கட்டு வீராங்கனை என்ற பெயரை ஷ்வேதா பெற்றுள்ளார்.
     உஸ்பெகிஸ்தானில் சமீபத்தில் 49ஆவது ஆசிய உடற்கட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நிறைவடைந்தது. இதில், பொறியியல் பட்டதாரியான ஷ்வேதா ரத்தோர் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.
     இதில் மகளிருக்கான உடற்கட்டு பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்றுத் தந்தார் அவர். அத்துடன், வரும் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் அவர் இதன் மூலம் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai