சுடச்சுட

    

    இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி: வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

    By இந்தூர்,  |   Published on : 14th October 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    18

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதன்கிழமை (14ஆம் தேதி) நடைபெறுகிறது.
     முன்னதாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும், முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி காணும் முன்னைப்பில் உள்ளது.
     மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு அணிக்கு தலைமை தாங்கி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை எதிர்கொண்டுள்ள தோனிக்கு இந்தச் சூழ்நிலைகள் யாவும் இக்கட்டானவையாகவே அமைந்துள்ளன.
     முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி ஆட்டமிழந்தது ரசிகர்களால் ஜீரணிக்க இயலாததாகவே இருந்தது. டி20 உலகக் கோப்பை போட்டி நெருங்கி வரும் நிலையில், தோனி தனது தலைமைப் பண்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
     இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் வழக்கம்போல தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் களமிறங்குகின்றனர். கடந்த சில ஆட்டங்களில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த ஆட்டத்திலும் அவரது செயல்பாடுசிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     முதல் ஒரு நாள் ஆட்டத்தில் அவர் 23 ரன்களில் வெளியேறிய ஷிகர் தவண், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். மற்றொரு ஆட்டக்காரரான அஜிங்கியா ரஹாணே கடந்த ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
     துணைக் கேப்டனான விராட் கோலி ரன்களை குவிக்கும் வகையில் செயல்பட வேண்டியுள்ளது. மறுபுறம், சுரேஷ் ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் கடந்த ஆட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடவில்லை. எனவே, இதில் அவர்களும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
     பந்து வீச்சைப் பொறுத்த வரையில், காயமடைந்த அஸ்வினுக்குப் பதிலாக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பந்து வீச உள்ளதாகத் தெரிகிறது. புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரின் பந்துகளை டி வில்லியரஸ் சிதறடித்ததால், அவர்கள் தங்களின் பந்து வீச்சில் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டியுள்ளது.
     ஸ்டூவர்ட் பின்னி பேட்டிங்கில் மட்டுமல்லாது, பந்து வீச்சிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மற்றொரு புறம், இந்தியாவுக்கு எதிராக தொடர் வெற்றிகளைச் சுவைத்து வரும் தென் ஆப்பிரிக்க அணி, இந்த ஆட்டத்தையும் தனக்கான வெற்றியாக மாற்றும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
     நேரம்: மதியம் 1.30 மணி,
     நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai