Enable Javscript for better performance
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? ஐஓசியுடன் ஐசிசி கலந்தாலோசிக்கிறது- Dinamani

சுடச்சுட

    

    ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? ஐஓசியுடன் ஐசிசி கலந்தாலோசிக்கிறது

    By  துபை,  |   Published on : 14th October 2015 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக கலந்தாலோசிக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) பிரதிநிதிகளை ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி சந்திக்க உள்ளார்.
     கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான கோரிக்கை வலுத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்தாலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     டி20 கிரிக்கெட் போட்டியானது ஏற்கெனவே சீனாவின் குவான்úஸாவிலும், தென் கொரியாவின் இன்சியானிலும் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்ப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, ஐசிசி இயக்குநர் கில்ஸ் கிளார்க், தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக ஒலிம்பிக் குழுவை அடுத்த மாதம் சந்திக்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai