Enable Javscript for better performance
கிரிக்கெட் சூதாட்ட வழக்கு: ஜன. 18 முதல் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கிரிக்கெட் சூதாட்ட வழக்கு: ஜன. 18 முதல் விசாரணை

    By  புது தில்லி,  |   Published on : 14th October 2015 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே உள்ளிட்ட 6 பேர் மீதான கிரிக்கெட் சூதாட்ட வழக்கில், அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என்று தில்லி பெருநகர நடுவர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
     கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சூதாட்டப் புகாரை விசாரித்த தில்லி குற்றவியல் பிரிவு போலீஸார், 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
     இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கனகவால், போலீஸாரின் குற்றப்பத்திரிகை மீது அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
     மேலும், இந்த வழக்கில் 6-ஆவது எதிரியான ஹான்ஸி குரோனியே, கடந்த 2002-ஆம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் உயிரிழந்ததால், அவருக்கு எதிரான விசாரணை தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
     15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக, ஹான்ஸி குரோனியேவுக்கு ரூ.1.5 கோடி இரு தவணைகளில் கொடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸார் தங்களது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனர்.
     அந்தக் குற்றப்பத்திரிகையில் ஹான்ஸி குரோனியே, ராஜேஷ் கல்ரா, சுனில் தாரா, கிஷன் குமார், ஹெர்ஷெல்லி ஜிப்ஸ், நிக்கி போஜே ஆகிய 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. பின்னர், நிக்கி போஜே, ஜிப்ஸ் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டன.
     வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜேஷ் கல்ரா, சுனில் தாரா, கிஷன் குமார் ஆகிய மூவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai