சுடச்சுட

  

  மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி! தொடரும் தோல்விகள்!

  By சநகன்  |   Published on : 14th October 2015 03:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kohli1

  இன்று நடந்த ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி பேட்ஸ்மேன் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

  இந்தூரில் நடக்கும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

  முன்னதாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும், முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி காணும் முன்னைப்பில் உள்ளது.

  கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி சரியாக ஆடாததால் இன்றாவது அணிக்குப் பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலியின் மோசமான ஆட்டம் இன்றும் தொடர்ந்தது. 18 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

  கோலி சரியாக ஆடாததால்தான் அவர் 4-ம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் வழக்கமாக ஆடி வரும் 3-ம் நிலை ரஹானேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாற்றமாவது கோலியின் ஆட்டத்தில் திருப்பத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் கோலி ரசிகர்களை மிகவும் ஏமாற்றியுள்ளார்.

  கடந்த 12 மேட்சுகளில் விராட் கோலி, ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்த 12 மேட்சுகளில் கோலியின் சராசரி 27.00 மட்டுமே. இதற்கு முன்பு அவர் அப்படியும் 7 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரை சதமாவது அடித்துவிடுவார். இந்தமுறை தான் அவருடைய மோசமான ஆட்டம் 12 மேட்சுகளாகத் தொடர்கிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai