சுடச்சுட

    

    முதலிடம் பிடிக்கும் டெஸ்ட் அணிக்கு ரூ.6.51 கோடி பரிசு: ஐசிசி அறிவிப்பு

    By  துபை,  |   Published on : 14th October 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுத்த ஆண்டிலிருந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் கிரிக்கெட் அணிக்கான பரிசுத் தொகையை ரூ.6.51 கோடியாக அதிகரித்து ஐசிசி வாரியம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது.
     முன்னதாக இந்த பரிசுத் தொகை ரூ.3.25 கோடியாக இருந்தது. அத்துடன், மகளிர் கிரிக்கெட் அணிக்கான பரிசுத் தொகையும் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
     இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
     2016-2023 காலகட்டத்தில் நடைபெறும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கான பரிசுத் தொகைக்கான ஒதுக்கீடானது ரூ.423.18 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
     இந்தத் தொகையானது, டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காக ஐசிசி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ரூ.455 கோடி நிதியைத் தவிர்த்து கூடுதலாக வழங்கப்படும்.
     இது, முந்தைய தொகையை விட 41 சதவீதம் அதிகமாகும். அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து முதல் இடம் பிடிக்கும் டெஸ்ட் அணிக்கு ரூ.6.51 கோடி பரிசாக வழங்கப்படும்.
     அதே காலகட்டத்தில் (2016-2023) மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான தொகை 5 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. அவர்களுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.28.64 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai