சுடச்சுட

  

  விமரிசனங்களுக்குப் பதிலடி: 92 ரன்கள் எடுத்து இந்திய அணியைக் காப்பாற்றிய தோனி!

  By DN  |   Published on : 14th October 2015 06:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni1xx

  இந்தூரில் நடக்கும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் தோனி 86 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து தன் மீதான விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முன்னதாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும், முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி காணும் முன்னைப்பில் உள்ளது.

  இன்றைய ஒருநாள் போட்டியில், இந்திய அணி வீரர்களில் அஸ்வின், பின்னி, மிஸ்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக அக்‌ஷர் படேல், ஹர்பஜன் சிங், மோஹித் சர்மா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

  இந்தத் தொடரில் அருமையாக ஆடிவரும் ரோஹித் சர்மா 3 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். 13-வது ஓவரில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார் தவான்.

  கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி சரியாக ஆடாததால் இன்றாவது அணிக்குப் பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலியின் மோசமான ஆட்டம் இன்றும் தொடர்ந்தது. 18 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அரை சதம் எடுத்த ரஹானே 51 ரன்களில் இம்ரான் தஹிர் பந்துவீச்சில் அவுட் ஆனார். ரெய்னா 0, அக்‌ஷர் படேல் 13, புவனேஷ்வர் குமார் 14 ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி 165 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

  பிறகு தோனியுடன் ஜோடி சேர்ந்த ஹர்பஜன் சிங், வேகமாக ரன்களை அடித்தார். 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஹர்பஜன் அவுட் ஆனார். அவர் ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரிகளும் அடித்தார். பின்னர் வந்த உமேஷ் யாதவ் 4 ரன்களில் வெளியேறினார்.

  இந்த ஒருநாள் போட்டிக்கு முன்பு கடுமையான விமரிசனங்களை எதிர்கொண்ட தோனி, இந்தப் போட்டியில் அனைத்து விமரிசனங்களும் சரியான பதிலடி கொடுத்தார். முதலில் விக்கெட்டுகள் விழுந்தபோது பொறுமையாக ஆடிய தோனி, கடைசி ஓவர்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல ரன்களைக் குவித்தார். 50-வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. தோனி 86 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். அவர் 7 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai