Enable Javscript for better performance
வியத்நாம் ஓபன்: இரண்டாவது சுற்றில் சாகேத் மைனேனி- Dinamani

சுடச்சுட

    

    வியத்நாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி இரண்டாவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.
     போட்டித் தரவரிசையில் 4ஆவது இடத்திலும், உலகத் தரவரிசையில் 168ஆவது இடத்திலும் இருக்கும் மைனேனி, தனது முதல் சுற்றில் ஸ்பெயினின் ஜெரார்ட் க்ரானோல்லர்ஸுடன் மோதினார்.
     இந்த ஆட்டத்தின் முடிவில் 6-4, 7-6 (3) என்ற செட் கணக்குகளில் ஜெரார்டை தோற்கடித்து, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் மைனேனி.
     இதனிடையே, இந்தயாவின் மற்ற வீரர்களான சுமித் நாகல், ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் தங்களது முதல் சுற்றில் தோல்வியைச் சந்தித்தனர். மற்றொரு வீரரான சனம் சிங்கின் ஆட்டம் மழை காரணமாக தடை செய்யப்பட்டது.
     வெற்றி குறித்து மைனேனி கூறுகையில், "மழை காரணமாக இந்4த ஆட்டத்தின் சூழ்நிலை மிகவும் கடுமையானதாக இருந்தது. ஜெரார்ட் மிகவும் சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கினார். இந்த ஆட்டத்தின் வெற்றிக்காக மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
     மறுபுறம், போட்டித் தரவரிசையில் 3ஆவது இடத்திலும், உலகத் தரவரிசையில் 135ஆவது இடத்திலும் இருந்த அட்ரியான் மெனன்டெஸ் மகெய்ராûஸ எதிர்கொண்டார் சுமித் நாகல்.0-6, 7-6 (2), 1-6 என்ற செட் கணக்கில் அட்ரியானிடம் அவர் தோல்வியைத் தழுவினார்.
     ஜப்பானின் ஹிரோயாசு எஹராவை எதிர்கொண்ட ஜீவன் நெடுஞ்செழியன், 2-6, 2-6 என்ற செட் கணக்கில் அவரிடம் தோல்வியடைந்தார். ஜெர்மனியின் கிகெüனை எதிர்கொண்ட சனம் சிங் 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தார். எனினும், மழை காரணமாக அந்த ஆட்டம் நிறுத்தப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai