சுடச்சுட

    
    24

    ஐஎஸ்எல் போட்டியின் 11ஆவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது தில்லி டைனமோஸ் எஃப்சி அணி.
     இந்த இரு அணிகள் இடையேயான ஆட்டம் புணேயில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது தில்லி அணி. இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய 24ஆவது நிமிடத்திலேயே தனது கோல் கணக்கைத் தொடங்கியது தில்லி அணி.
     அந்த அணியின் ஃப்ளோரன்ட் மலெüடா கார்னர் கிக் அடித்து அனுப்பிய பந்தை லாவகமாக தலையால் தட்டி கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார் சக வீரரான ராபின் சிங். இதைத் தொடர்ந்து தனக்கான முதல் கோலை அடிக்க தொடர்ந்து போராடி வந்தது புணே அணி.
     எனினும், அந்த வாய்ப்பை தில்லி அணியினர் வழங்கவேயில்லை. தில்லி அணியினரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், இடைவேளையின்போது 1-0 என்ற கணக்கில் தில்லி அணி முன்னிலையில் இருந்தது.
     அடுத்த பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து போராடின. ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தது தில்லி அணி. அந்தப் பெருமையை தனதாக்கிக் கொண்டார் ரிச்சர்ட் கட்úஸ. இறுதியாக புணே அணியும் அதே 90ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. எனினும், ஆட்ட நேரம் முடிந்ததால் தில்லி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
    இன்றைய ஆட்டம்
     நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி
     எஃப்சி கோவா
     நேரம் : இரவு 7 மணி, இடம்: குவாஹாட்டி.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai