சுடச்சுட

  

  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாகீர் கான்

  By DN  |   Published on : 15th October 2015 01:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  zaheer1

  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இன்று இத்தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

  தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதேசமயம் ஐபிஎல் 9 போட்டியில்  விளையாட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ‘கிரிக்கெட் தான் எனக்கு எல்லாமே. அதுதான் என்னை உருவாக்கியது. எல்லாவற்றையும் கொடுத்தது’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு குறித்த உணர்வுபூர்வமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

  ஜாகீர் கான் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளிலும் 200 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட்டில் 311 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டியில் 282 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 17 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜாகீர் கான், 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2000-ம் ஆண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai