சுடச்சுட

    

    நிகர்நிலை பல்கலை. கூடைப்பந்துப் போட்டி: எஸ்.ஆர்.எம்., இந்துஸ்தான் அணிகள் முதலிடம்

    By ஸ்ரீவில்லிபுத்தூர்,  |   Published on : 15th October 2015 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இடையே நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணிகள் முதலிடம் பெற்றன.
     கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றன. இதில், ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் மோதின.
     பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த் முன்னிலையில், துணைவேந்தர் ச.சரவணசங்கர் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
     ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றது. சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம் பெற்றது. கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தையும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
     இதையடுத்து புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
     நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வெண்குமார், எம்.ஜெயக்குமரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
     ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் ஜி.டி.செல்வகணேஷ், எஸ்.விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai