சுடச்சுட

  

  ரூ.27 கோடியில் விளையாட்டுத் துறை கட்டடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

  By சென்னை,  |   Published on : 15th October 2015 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  23

  தமிழகத்தில் ரூ.27 கோடியில் விளையாட்டுத் துறைக்கான கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
   இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
   சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 600 விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஏதுவாகக் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி, சமையல் கூடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
   மேலும், சென்னை செனாய் நகர் நீச்சல் குள வளாகத்தில் குறுகிய தூர நீச்சல் குளம், மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் விசை நீர் தெளிப்பான்கள், நீர்வடிகலன், ஒளிரும் உயர்மின் விளக்கு வசதிகளுடன் கூடிய செயற்கை இழை வளைகோல் பந்து மைதானம், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுதள பாதை, தங்கும் விடுதி, கையுந்துபந்து மைதானம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்தார். திருநெல்வேலி அண்ணா விளையாட்டரங்கில் கையுந்துபந்து மைதானம், நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் குளம், விளையாட்டு விடுதி, திருச்செங்கோட்டில் ஆடுகளம், கபடி ஆடுகளங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் விளையாட்டு விடுதி, தேனி மாவட்டத்தில் நீச்சல் குளம் என மொத்தம் ரூ.27.27 கோடி மதிப்பிலான கட்டடங்களை அவர் திறந்து வைத்தார்.
   இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai