சுடச்சுட

  

  இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் புதன்கிழமை முதல் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை அணி.
   டாஸ் வென்ற இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணரத்னேவும், கெüஷல் சில்வாவும் களமிறங்கினர். கெüஷல் சில்வா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த திரிமணேவும் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நிதானமாக ஆடி ரன்கள் குவித்து வந்த கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் சண்டிமால்.
   இதையடுத்து, முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது இலங்கை அணி. அந்த அணியின் கருணரத்னே 135 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 72 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai