சுடச்சுட

  

  இந்திய கிரிக்கெட் அணி மேலாளர் வினோத் பட்கேவுக்கு அபராதம்

  By  இந்தூர்,  |   Published on : 16th October 2015 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடுவரின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்ததாகக் கூறி இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் வினோத் பட்கேவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
   தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. போட்டி நடுவர்களில் ஒருவரான வினித் குல்கர்னி சில முடிவுகளை தவறாக எடுத்ததாக விமர்சனம் எழுந்தது. தர்மசாலாவில் நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு நடுவரின் செயல்பாடுகள் குறித்து கேப்டன் தோனி மறைமுகமாக அதிருப்தி தெரிவித்தார்.
   இந்நிலையில், இந்திய அணியின் மேலாளர் வினோத் பட்கே, இணையதள நிறுவனமொன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், வினீத் குல்கர்னியின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்தார்.
   இதையடுத்து அவரிடம் புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி, அவரது போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai