சுடச்சுட

    

    ஈடன் கார்டன்ஸ் மைதானம் சர்வதேச தரத்தை விரைவில் எட்டும்: கங்குலி உறுதி

    By DN  |   Published on : 16th October 2015 02:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eden1

    அடுத்த 3 மாதங்களில் ஈடன் கார்டன்ஸ் மைதானம் சர்வதேச தரத்தை எட்டும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்து கோப்பையைப் பறிகொடுத்த இந்திய அணி, தொடரின் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கவிருந்த போட்டி, மழை காரணமாக தாமதமானது. மழை தொடர்ந்து பெய்ததாலும், மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதாலும் போட்டியை திட்டமிட்டபடி தொடங்க இயலவில்லை. 3 எந்திரங்கள் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டும், போதிய வடிகால் வசதி செய்யப்படாததால், மழை நின்று 3 மணி நேரமாகியும் போட்டி நடத்துவதில் சிக்கல்கள் இருந்தன. சரியான வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரை முழுமையாக வடியவைக்க முடியவில்லை. கடைசியில் அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

    ஆட்டம் தடைபட்டதால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் வடிகால் வசதி குறித்து விமரிசனங்கள் எழுந்தன. சர்வதேசத் தரத்துக்கு ஈடாக ஆடுகளம் இல்லை என்று பலர் விமரிசனம் செய்தார்கள். இதற்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:

    ‘கடந்த 20 வருடங்களாக உலகம் முழுக்கப் பயணம் செய்துள்ளேன். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மைதானங்களின் தரத்தை நன்கு அறிவேன். அப்படிப்பட்ட ஒரு தரம் கொண்ட மைதானமாக அடுத்த 3 மாதங்களில் ஈடன் கார்டன்ஸ் மாறும் என்று உறுதி கூறுகிறேன். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன’ என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai