சுடச்சுட

    
    47

    ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் 12ஆவது ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை அபாரமாக வெற்றி கண்டது எஃப்சி கோவா அணி.
     இந்த இரு அணிகள் இடையேயான ஆட்டம் குவாஹாட்டியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     இதில் தொடக்கத்தில் நார்த் ஈஸ்ட் அணியே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் சக வீரர் ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் அடித்த பந்தை தனது தலையால் முட்டி கோலாக்கினார் நார்த் ஈஸ்ட் அணியின் டாட்ஸி.
     ஆனால், நார்த் ஈஸ்ட்டின் ஆதிக்கம் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் கோவா அணி தனக்கான கோல் கணக்கைத் தொடங்கியது. அந்த அணியின் லுக்கா அருமையாக கோல் அடித்தார்.
     அடுத்த 2 நிமிடங்களிலேயே அந்த அணிக்கான இரண்டாவது கோலும் கிடைத்தது. ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஜோஃப்பர் கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்தை நார்த் ஈஸ்ட் அணியின் செட்ரிக் ஹெங்பார்ட் அருமையாக தடுத்தார்.
     எனினும், அவரிடம் இருந்து திரும்பி வந்த பந்தை ரெய்னால்டோ கோலாக மாற்றினார். இதையடுத்தும் கோவா அணியினரே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். நார்த் ஈஸ்ட் அணியினர் தடுமாறத் தொடங்கினர்.
     இவ்வாறாக, ஆட்டத்தின் பாதி நேரத்தில் கோவா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இடைவேளைக்குப் பிறகும் நார்த் ஈஸ்ட் அணியினரால் கோல் அடிக்கும் வாய்ப்புகளைப் பெற இயலவில்லை.
     ஆனால், கோவா அணி வீரர்கள் அணிக்கான 3ஆவது கோலை அடித்தனர். ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் அந்த அணியின் லியோ மெளரா பாஸ் செய்து கொடுத்த பந்தை கோலாக மாற்றினார் மந்தர் தேசாய்.
     இதையடுத்து நார்த் ஈஸ்ட் அணியினருக்கு கிடைத்த பல்வேறு கோல் வாய்ப்புகளை அந்த அணி வீரர்கள் வீணடித்தனர். இந்நிலையில் ஆட்ட நேரம் முடிந்ததால் கோவா அணி 3-1 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வென்றது.
     இன்றைய ஆட்டம்
     மும்பை சிட்டி எஃப்சி
     சென்னையின் எஃப்சி
     நேரம் : இரவு 7 மணி, இடம்: நவி மும்பை
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai